இந்தியா பிரதான செய்திகள்

அந்தமானில் மிதமான நிலநடுக்கம்


அந்தமானில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.; இன்று அதிகாலை 2.51 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

அந்தமானில் முன்னதாக கடந்த மாதம்  4ம் தேதி 4.8 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன்    23ம் திகதி ரிக்டர் அளவுகோலில் 4.5 அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *