இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சி சந்தையில் தீயினால் எரிந்த 122 வியாபாரிகளுக்கு 71 மில்லியன் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கடந்த செம்ரெம்பா் மாதம் தீயினால் எரிந்து அழிந்துபோன கிளிநொச்சி பொதுச் சந்தை வியாபாரிகளுக்கு இன்று 28-12-2016 நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றம், புனா்வாழ்வு,  சிறைசாலைகள் மறுசீரமைப்பு,  இந்து சமய  விவகார அமைச்சா் டிஎம் சுவாமிநாதனினால் 122  சந்தை வியாபாரிகளுக்கு 71 மில்லியன் ரூபாக்கள் நட்டஈடாக  வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை  பத்து முப்பது  மணிக்கு  கிளிநொச்சி மாவட்டச் செலயகத்திறகு சென்ற  அவா் அங்கு மாவட்டச் செயலாளா் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போதே  தீயினால் எரிந்த சந்தை வியாபாரிகளுக்கு நட்டஈட்டை வழங்கி வைத்துள்ளாா்.

அந்த வகையில்  44 ஆடம்பரப்பொருள் விற்பனைக் கடைகளுக்கும், 53 புடவை கடைகளுக்கும்,22 பழக் கடைகளுக்கும்,2 தையல் கடைகளுக்கும், 01 தேனீா் கடைக்கும்  நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது. இதில் 15  இலட்சம் ரூபா  வீதம்நட்டஈடு 19 வியாபாரிகளுக்கும், பத்து இலட்சம் ரூபா வீதம் 13 பேருக்கும்,  ஜந்து இலட்சம் ரூபா வீதம் நட்டஈடு 40 வியாபாரிகளுக்கும், வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு ஏனைய வியாபாரிகளுக்கு மூன்று இலட்சம், இரண்டு இலட்சத்து ஜம்பதாயிரம், ஒரு இலட்சம் என வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் அமைச்சருடன் வட மாகாண ஆளுநா் றெஜினோல்ட் குரே,   இராஜாங்க  அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினா் சி. சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் மு. சந்திரகுமாா்,  அரச அதிபா் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரச அதிபா் சத்தியசீலன்,   கரைச்சி  பிரதேச செயலாளா் கோ. நாகேஸ்வரன்,  உள்ளுராட்சி உதவி ஆணையாளா் பிரபாகரன், கரைச்சி பிரதேச  செயலாளா் க.கம்சநாதன்,வியாபாரிகள் என பலா் கலந்துகொண்டனா்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *