இலங்கை பிரதான செய்திகள்

வடமாகாண தொண்டராசிரியர்கள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளது

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நிரந்தர நியமனம் கோரி வடமாகாண தொண்டராசிரியர்கள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம்  கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  யாழில் உள்ள வடமாகாண ஆளூநர் செயலகம் முன்பாக இன்று காலை 9மணி முதல் தொண்டராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நிரந்தர நியமனம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசி தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே  அளித்த வாக்குறுதியை அடுத்தே  வடமாகாண தொண்டராசிரியர்களது உண்ணாவிரத போராட்டம்  தற்காலிகமாக  கைவிடப்பட்டுள்ளதென தொண்டராசிரியர் சங்க தலைவர் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.

வடமாகாண தொண்டராசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

Dec 28, 2016 @ 13:31

நிரந்தர நியமனம் கோரி வடமாகாண தொண்டராசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழில் உள்ள வடமாகாண ஆளூநர் செயலகம் முன்பாக இன்று காலை 9மணி முதல் தொண்டராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *