இலங்கை பிரதான செய்திகள்

நாட்டை மீளவும் பிளவடையச் செய்ய இடமளிக்கப்படாது – மனோ கணேசன்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நாட்டை மீளவும் பிளவடையச் செய்ய இடமளிக்கப்படாது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மீளவும் நாட்டை பிளவடையச் செய்ய எவருக்கும் இடமில்லை என குறிப்பிட்டுள்ள அவர் நாட்டை பிளவடையச் செய்ய முயற்சிக்கப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் மீளவும் நாட்டை பிளவடையச் செய்ய முடியாது எனவும், புதிய அரசியல் சாசனம் இதற்கு இடமளிக்கும் வகையில் உருவாக்கப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசியல் சாசன உருவாக்கம் தொடர்பில் ஜனநாயக ரீதியில் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிலரும் கூட்டு எதிர்க்கட்சியின் தேவைக்கு ஏற்ப கருத்து வெளியிட்டு வருவதாக வருத்தம் வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசியப் பிரச்சினைகளில் செயற்படுவதாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  அறிவிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *