இலங்கை பிரதான செய்திகள்

வடமாகாண சபையில் இதுவரை காலமும் 337 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடமாகாண சபையில் இதுவரை காலமும் 337 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்து உள்ளார்.

வடமாகாண சபையின் 74 ஆவது அமர்வு புதன்கிழமை காலை நடைபெற்றது. அந்த அமர்வில் இரண்டு பிரேரணைகள் முன் மொழியப்பட்டு சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

குறித்த பிரேரணையுடன் வடமாகாண சபையில் இதுவரை 337 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. வடமாகாண சபை கடந்த 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் திகதி  முதலாவது  அமர்வுடன் ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *