உலகம் பிரதான செய்திகள்

பிரித்தானியாவில் சிறுபான்மையினர் கல்வியில் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


பிரித்தானியாவில் சிறுபான்மையினர் கல்வியில் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொள்வதில் சிறுபான்மையினர் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தொழில் தருனர்கள் சிறுபான்மையினத்தவரை ஒடுக்குமுறைக்கு உட்படுத்துவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கறுப்பின மற்றும் ஆசிய சமூகங்களைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் பாடசாலைகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், குறிப்பாக சிறந்த கல்வித் திறமைகளை வெளிப்படுத்தும் கறுப்பின மற்றும் ஆசிய முஸ்லிம் பின்னணியைக் கொண்ட பெண்கள் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொள்வதில் கடுமையான சிரமங்களையும் சவால்களையும் எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *