இலங்கை பிரதான செய்திகள்

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அச்சுறுத்தல் விடுத்த இளைஞருக்கு பிணை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு முகநூல் ஊடாக அச்சுறுத்தல் விடுத்த இளைஞருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு முகநூல் ஊடாக இந்த இளைஞர் கொலை மிரட்டல் விடுத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதான குறித்த இளைஞர் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் இளைஞரை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆடிகல உத்தரவிட்டுள்ளார். விசாரணை நடத்தப்பட்டு வருவதனால் பிணை வழங்கப்பட முடியாது என நீதிமன்றில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ள போதும்  ஆரம்பகட்ட விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாகவும் பிணை வழங்குமாறும் இளைஞர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி  விடுத்த  கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான் பிணையில் இளைஞரை விடுதலை செய்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *