இலங்கை பிரதான செய்திகள்

யாழ் பல்கலை மாணவர் மீதான துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய காவல்துறை உத்தியோகத்தர்களின் விளக்க மறியல் காலம் நீடிப்பு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து காவல்துறை உத்தியோகத்தர்கள் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஐந்து காவல்துறை உத்தியோகத்தர்கள் இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களான குறித்த காவல்துறை உத்தியோகத்தர்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 13ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் எஸ்.சதீஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை; நிராகரித்துள்ள  நீதவான் சந்தேக நபர்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துமாறும் அவர்களை தொடர்ந்தும் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஒக்ரோபர் மாதம் 21ம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது நடத்தப்பட்டிருந்த துப்பாக்கிச் சூட்டுசம்பவத்தில் குறித்த மாணவர்கள் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *