உலகம் பிரதான செய்திகள்

சிரியாவில் ஐ.எஸ் நிலைகள் மீது ரஸ்ய விமானங்கள் தாக்குதல்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சிரியாவில் ஐ.எஸ் நிலைகள் மீது ரஸ்ய விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. ரஸ்ய யுத்த விமானங்கள் சிரியாவில் அமைந்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளின் மூன்று நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக துருக்கி இராணுவம் அறிவித்துள்ளது.

சிரியாவின் al-Bab நகரில் கடந்த இருபத்து நான்கு மணித்தியாலங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துருக்கி இராணுவப் படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பகுதியில் முதல் தடவையாக ரஸ்ய படையினர் உதவிக்காக தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடு தழுவிய ரீதியில் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *