உலகம் பிரதான செய்திகள்

தென் கொரிய ஜனாதிபதியை சர்ச்சையில் சிக்க வைத்த பெண்ணின் மகள் கைது

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தென் கொரிய ஜனாதிபதிக்கு எதிராக நாடாளுமன்றில் குற்றப் பிரேரணைக் கொண்டு வர காரணமாகவிருந்த பெண்ணின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார். 20 வயதான Chung Yoo-ra   என்ற இந்த யுவதி டென்மார்க்கில் வைத்து கைது செய்யப்பட்டதாக தென் கொரிய காவல்துறையினர்  தெரிவிக்கின்றனர்.

சட்டவிரோதமான முறையில் டென்மார்க்கில் தங்கியிருந்தார் எனவும், அவரை நாடு கடத்துமாறு அரசாங்கம் கோரியுள்ளதாகவும் தென் கொரிய காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

Chung Yoo-ra இன் தாயார் ஜனாதிபதி Choi Soon-sil உடன் பேணிய நட்புறவை துஸ்பிரயோகம் செய்து ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தி பெரும் சர்ச்சை ஏற்படுத்தப்பட்டிருந்ததன் அடிப்படையில் தென் கொரிய ஜனாதிபதிக்கு எதிராக கடந்த 9ம் திகதி குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்தது.

Chung Yoo-ra ன் தாயாரான Choi Soon-sil அதிகாரத்தை துஸ்பிரயோகத்தை செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *