இந்தியா பிரதான செய்திகள்

திமுகவின் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் தெரிவு செய்யப்பட்டுள்ளார்:-

திமுகவின் பொருளாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின், அக்கட்சின் செயல் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்றையதினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனின் தலைமையில் திமுக பொதுக்குழு ஆரம்பமாகிய நிலையில் காலஞ்சென்ற தமிழக முதலமைச்சர் ஜெயலலதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அடுத்து திமுகவின் செயல் தலைவராக மு.க. ஸ்டாலினை நியமிக்கும் தீர்மானத்தை திமுகவின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் முன்மொழிய அதனை தலைமை நிலைய முதன்மை செயலாளர் துரைமுருகன் வழிமொழிந்தார்.  பின்னர், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, திமுகவின் செயல் தலைவராக தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதேவேளை ​முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்க உள்ளார். விவசாயிகள் பிரச்சினை குறித்து முதல்வருடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *