இலங்கை பிரதான செய்திகள்

இந்திய இலங்கை கரையோரப் பாதுகாப்புப் பிரிவுகளுக்கு இடையில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


இந்திய இலங்கை கரையோரப் பாதுகாப்புப் பிரிவுகளுக்கு இடையில் உயர் மட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது. இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ராஜேந்திர சிங்  இலங்கை கரையோரப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாநாயகம் ரியர் அட்மிரால் சமன்த விமலதுங்கவை சந்தித்துள்ளார்.

சமன்த விமலதுங்க தற்போது இந்தியாவிற்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விமலதுங்கவுடன் மேலும் இரண்டு பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவினர் இந்த பயணத்தில் இணைந்து கொண்டுள்ளனர். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *