இந்தியா பிரதான செய்திகள்

தமிழகத்தில் 5.92 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது:-

வாக்காளர் சிறப்பு திருத்தத்தை அடுத்து தமிழகத்தில் 5.92 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ள நிலையில் இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டை விட 2017 ஆம் ஆண்டில் 10.22 லட்சம் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர் என தெரிவித்துள்ளது.

இதில் ஆண் வாக்காளர்கள் 2.93 கோடி  எனவும்  பெண் வாக்காளர்கள் 2.99 கோடி மூன்றாம் பாலின வாக்காளர்கள் 5ஆயிரத்து  நாப்பது  பேர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 10 ஆம் திகதி முதல் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *