இலங்கை பிரதான செய்திகள்

மாவட்ட விவசாயக்குழு கூட்டம் யாழ் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றுள்ளது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ் மாவட்ட விவசாயக்குழு கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று(05) இடம்பெற்றது. இதன் போது உரையாற்றிய அரசாங்க அதிபர், எமக்கு நிலத்தடி நீர்வளமே நீர் ஆதாரம். இம்முறை பருவமழை பொய்த்ததால் மார்ச் மாதம் முதல் குடிநீர் விநியோகம் செய்யும் நிலை ஏற்படலாம் விவசாயத்திற்கு பயன்படுத்தும்  நீரின் அளவையும் குறைக்க வேண்டியுள்ளமையினால் அதற்கேற்ற பயிர்களை பயிரிடவேண்டியுள்ளது. எனவே, விவசாயிகள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் தமது பங்களிப்பினை வழங்க வேண்டுமென தெரிவித்தார்.

யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் துறை சார் திணைக்கள உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில் விவசாயக் காப்புறுதி,வங்கிக்கடன், தென்னை மற்றும் பனை அபிவிருத்தி விவசாய ஆராய்ச்சிகள்   நீர்ப்பாசனம் விதை உட்பத்தி எதிர்வரும் காலங்களில் பயிரிடவேண்டிய பயிர்கள் மற்றும் இயறகை முறையில் விளைச்சலை அதிகப்படுத்தக் கூடிய உத்திகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *