இலங்கை பிரதான செய்திகள்

வொக்ஸ்வோகன் நிறுவனம் குளியாபிட்டியில் முதலீடு செய்யவில்லை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உலகின் முதனிலை கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான வொக்ஸ்வோகன் நிறுவனம் குளியாபிட்டியில் முதலீடு செய்யவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் குளியாபிட்டியில் அடிக்கல் நாட்டப்பட்ட உற்பத்திச்சாலையானது வொக்ஸ்வோகன் கார் உற்பத்தி நிறுவனத்துடன் தொடர்புடையதல்ல என குறிப்பிட்டுள்ள அவர் வொக்ஸ்வோகன் நிறுவனத்தின் சில பிரச்சினைகள் காரணமாக அரசாங்கம் முதலீடு செய்ய அனுமதிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், குளியாபிட்டியில் அமைக்கப்படும் பாரிய உற்பத்திசாலையில் வொக்ஸ்வோகன் ரக கார்களும் பொருத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொலைக்காட்சி ஊடகமொன்று இது பற்றிய பிழையான செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும், தம்மீதான காழ்ப்புணர்ச்சியினால் இவ்வாறு செய்தி வெளியிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *