இந்தியா பிரதான செய்திகள்

ஒரிசாவில் இறந்த மகளின் உடலை தோளில் சுமந்து சென்ற தந்தை:-

இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் இறந்த தன்னுடைய மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்ற மஜ்ஹி என்பவரின் புகைப்படம் உலகம் எங்கும் கவனத்தை ஈர்த்திருந்தது. இந்த நிலையில் அதேபோல் ஒரு சம்பவம் ஒரிசாவில் மீண்டும் இடம்பெற்றுள்ளது.

ஒரிசாவின் அங்குல் மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக சுமி என்ற 5வயதுச் சிறுமி இறந்துள்ளார். மகளின் உடலை அம்புலன்ஸில் எடுத்துச் செல்ல முடியாத பொருளாதார நிலையில் தந்தை கதி திபார் தோளில் மகளின் உடலை சுமந்து சென்ற அவலமம் நடந்தேறியது.

அம்புலன்ஸ் வழங்க மறுக்கப்பட்டமை காரணமாகவே தந்தை மகளை அவ்வாறு சுமந்து 15 கிலோமீற்றரில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் சென்றதாக இந்தியத் தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது. கதி திபார் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்பவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
கதி திபார் மகளின் உடலை தூக்கிச் செல்லும் காட்சியை தெருவில் சென்றவர்கள் தமது கைபேசியில் புகைப்படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பரவவிட்டுள்ளனர். இதனால் இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை தோற்றுவித்துள்ளது.
உயிரிழந்தவர்களுக்கு உரிய மரியாதை அளிப்பதை உறுதி செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளோம். அலட்சியமாக நடந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அனில் குமார் சமால் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பல்லஹாரா ஆரம்ப சுகாதார நிலையத்தின் இரு உத்தியோகத்தர்கள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *