உலகம் பிரதான செய்திகள்

நைஜீரியாவில் ராணுவமுகாம் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 20 பேர் பலி


நைஜீரியாவில் போக்கோஹரம் தீவிரவாதிகள் ராணுவமுகாம் ஒன்றின் மீது மேற்கொண்ட தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள யோபே மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமில் தீவிரவாதிகள் ஐந்து ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றதாகவும், ராணுவம் நடத்திய பதில்; தாக்குதலில் 15 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும்  உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வேறு  பிற பகுதிகளிலும் நேற்றையதினம் போக்கோஹரம் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல்களை நடத்தியதாகவும் அந்த செய்திகள் தெரிவித்துள்ளன. ,கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சமஅளவில் வாழ்ந்து வரும் நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்குட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டுமென போக்கோஹரம் அமைப்பினர் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *