உலகம் பிரதான செய்திகள்

அமெரிக்காவில் 9 கறுப்பின மக்களை கொன்ற நபருக்கு மரண தண்டனை

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ள  தேவாலயம் ஒன்றில்  9 கறுப்பின மக்களை கொன்ற நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2015-ஆம் ஆண்டு தேவாலயத்தில் இருந்த ஒரு பைபிள் ஆய்வு குழுவின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய டைலன் ரூஃ ப் (Dylann Roof )என்ற 21வயதான இந்த நபர் மீது 33 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில்  பாதிரியார் உட்பட 3 ஆண்களும் 6 பெண்களும் உயிரிழந்தனர்.  கறுப்பின வெறுப்புணர்வே இந்தப் படுகொலைக்கு காரணம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தனது குற்றத்துக்கு மன்னிப்பு எதனையும் தெரிவிக்காத டைலன் ரூஃ ப், இதனை செய்ய வேண்டும் என தான்   நினைத்தே  செய்ததாக  தீர்ப்பு கூறும் நடுவர்களிடம் தெரிவித்துள்ளார்.

சுமார் 3 மணித்தியாலங்கள்  நடுவர்கள் குழுவினர்  இது குறித்து   விவாதித்த  பின்னரே தீர்ப்பினை வழங்கியுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *