இலங்கை பிரதான செய்திகள்

தைத்திருநாளில் மானிட சமூகத்தின் பரந்த உள்ளத்தின் உயர்ந்த பண்புகள் வெளிப்படுத்தப்படுகின்றன – ஜனாதிபதி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தைத்திருநாளில் மானிட சமூகத்தின் பரந்த உள்ளத்தின் உயர்ந்த பண்புகள் வெளிப்படுத்தப்படுகின்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையிலான பரஸ்பர உடன்படிக்கையை புதுப்பிக்கும் பண்டிகையாக தைப் பொங்கல் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  இந்து சமயத்தை பின்பற்றும் உலக வாழ் தமிழ் மக்கள் தொன்றுதொட்டு மேற்கொண்டுவரும் சூரிய வழிபாட்டின் மிகச் சிறந்த வழிபாடாகவே தைப்பொங்கல் பண்டிகை உள்ளது.

பேண்தகு யுகத்தை நோக்கிய புதிய பாதையில் அடியெடுத்து வைக்கும் இந்த சந்தர்ப்பத்தில் தைத் திருநாள் தொன்றுதொட்டு கொண்டுவரும் இந்த வாழ்த்துச் செய்தியானது அதனை மேலும் மெருகூட்டுவதாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *