இலங்கை பிரதான செய்திகள்

தைத்திருநாள் சமத்துவம் மற்றும் நன்றியுணர்வு என்பவற்றின் பெறுமதியை எடுத்துக் கூறும் – பிரதமர்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தைத்திருநாள் சமத்துவம் மற்றும் நன்றியுணர்வு என்பவற்றின் பெறுமதியை எடுத்துக் கூறும் வகையில் அமைந்துள்ளது என என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தைப் பொங்கலை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இன, மத, கலாசார பேதங்களைத் தாண்டிய அமைதியான, சுதந்திரம்மிக்க நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவது நம் அனைவரினதும் பொறுப்பு என்பதை நினைவுபடுத்துவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தைத்திருநாள், கலாசார, சமய பல்வகைமையை மதித்து, மனித சமூகத்தின் மத்தியிலும், சுற்றுச் சூழலுடனும் நல்லிணக்கத்துடன் வாழ்வதன் முக்கியத்துவத்தை எமக்கு நினைவூட்டும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *