இலங்கை பிரதான செய்திகள்

இதய சுத்தியுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் – சம்பந்தன்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இதய சுத்தியுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த  வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்துள்ள பொங்கல்  வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைவாழ் மக்களிடையே புரிந்துணர்வு, நல்லிணக்கம் ஏற்பட்டு சாந்தி, சமாதானத்துடன் கூடிய சௌபாக்கியமிக்க நாடாக இந்த நாடு சிறப்புற பிறக்கும் தைத்திங்கள் வழிசமைத்திடவேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

தைமாதம் மக்களுக்குப் பல எதிர்பார்ப்புக்களை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அந்தவகையில், முன்வைக்கப்படவுள்ள அரசியல் அமைப்பானது நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமானதும் நீடித்து நிலைத்திருக்கக்கூடியதுமான தீர்வினைக் காணவழிகாட்டவேண்டும் என்பதே தமிழரின் எதிர்பார்ப்பாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அது இலங்கை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்திடவேண்டும் எனவும், இதய சுத்தியுடனான இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என இந்த நன்னாளில் நாம் நம்பிக்கைகொள்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *