பிரதான செய்திகள் விளையாட்டு

கோஹ்லி என்னை முந்துவார் – தோணி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

விராட் கோஹ்லி என்னை விடவும் அதிகளவு போட்டிகளில் வெற்றியீட்டுவார் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோணி தெரிவித்துள்ளார். தம்மை விடவும் அதிகளவு போட்டிகளில் வெற்றியீட்டக்கூடிய சாத்தியம் கோஹ்லிக்கு உண்டு என  குறிப்பிட்டுள்ள அவர் கோஹ்லி வரலாற்றை திரும்ப எழுதுவார் எனவும், இந்தியாவின் தலை சிறந்த அணியாக தற்போதைய அணியை உருவாக்குவார் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளுக்கு ஒரு தலைவர், ஒருநாள் போட்டிகளுக்கு மற்றுமொரு  தலைவர் டுவன்ரி20 போட்டிகளுக்கு மற்றுமொரு தலைவர் என்ற அடிப்படையில் நியமனங்களை மேற்கொள்வது பொருத்தமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே இந்திய அணியை மூன்று வகையான போட்டிகளுக்கும் தலைமை தாங்கும் பொறுப்பு ஒருவரிடம் வழங்கப்பட வேண்டியது  அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *