இலங்கை பிரதான செய்திகள்

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் கால வரையறையற்ற பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களால் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான கால வரையறையற்ற பூரண பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றை  இன்று  ஆரம்பித்துள்ளனர்  இதுதொடர்பாக  அவர்கள்  விடுத்துள்ள  ஊடக  அறிக்கையில்

16.01.2017 திங்கட்கிழமை முதல் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களால் தனியார் மருத்துவ கல்லூரிக்;கு எதிரான கால வரையறையற்ற பூரண பகிஷ்கரிப்பு போராட்டமானது ஆரம்பமானது. இப்பகிஷ்கரிப்பு போராட்டமானது இலங்கையிலுள்ள ஏழு மருத்துவ பீடங்களினதும் ஒன்றிணைப்புடன் நடைபெற்று வருகின்றது. இப் போராட்டத்தின் போது சமூகத்தின்; பல்வேறு நிலைகளிலுள்ள மக்களிடம் நேரடியாக சென்று தனியார் மருத்துவ கல்லூரியினால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்படப்போகும் பாதகமான விளைவுகளை பற்றி விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறோம்.

இப்பகிஷ்கரிப்பு போராட்டமானது பின்வரும் நான்கு கோரிக்கைளை முன்வைத்து மேற்கொள்ளப்படுகிறது.

1.    நடைமுறைப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் வரை தனியார்     மருத்துவ கல்லூரிக்கு மாணவர்களை உள்வாங்குதல் நிறுத்தப்பட     வேண்டும்.

2.    மருத்துவக்கல்வி , மருத்துவத்துறை மற்றும் நோயாளர் பராமரிப்புச்     சேவை என்பவற்றின் தரத்தை உறுதிப்படுதவும் அவை சார்ந்த     விடயங்களை கையாள்வதற்கும் இலங்கை மருத்துவ சபை மாத்திரம்     எந்த வித அரசியல் தலையீடுகளும் இன்றி சுயாதீனமாக செயற்பட     வேண்டும்.

3.    இதுவரை SAITM தனியார் மருத்துவ கல்லூரியில் கல்வி பயின்ற     மாணவர்களின் எதிர்கால நலன் கருதி இலங்கை மருத்தவ     சபையினால் சுயாதீனமாக அவர்களுக்கு பொருத்தமான தீர்வு     வழங்கப்பட வேண்டும்.

4.   SAITM தனியார் மருத்தவ கல்லூரி; மற்றும் நிவில் பெர்ணான்டோ     வைத்தியசாலை முற்று முழுதாக அரசமயமாக்கப்படுவதுடன்     இலங்கை மருத்தவ சபையினால் சுட்டிக்காட்டப்பட்ட  குறைகள்     நிவர்த்தி செய்யப்பட்டு அரச மருத்துவ பீடமாக்கப்பட வேண்டும். என  குறித்த ஊடக அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *