இலங்கை பிரதான செய்திகள்

ஊனமுற்ற படைவீரர் ஒருவர் இராணுவத்திற்கு களங்கம் கற்பிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஊனமுற்ற படைவீரர் ஒருவர் இராணுவத்திற்கு களங்கம் கற்பிக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லான்ஸ் கோப்ரல் எச்.ஏ. ஹீன்பண்டா என்ற படைவீரர் இராணுவ நடவடிக்கைகளின் போது ஊனமுற்றுள்ளார்.

இதன் பின்னர் யக்கல ரனவிரு ஆடைக் கைத்தொழிற்சாலையில்  கணக்குப் பிரிவில் இவருக்கு பணி வழங்கப்பட்டுள்ள நிலையில் இவர் இலகு கடன் கொடுப்பனவு திட்டமொன்றின் நிதியை பாரியளவில் மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விசாரணைகளின் போது இவரும் உயர் அதிகாரியொருவரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தெளிவாக அம்பலமாகியுள்ளது. மோசடி செய்த பணத்தை செலுத்துமாறு உத்தரவிட்ட போது இராணுவத்தினர் துன்புறுத்துவதாக குறித்த படைவீரர் குற்றம் சுமத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *