இலங்கை பிரதான செய்திகள்

வொய்ஸ் ஒப் அமெரிக்க வானொலிச் சேவையை ரத்து செய்ய அமைச்சரவை அனுமதி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


வொய்ஸ் ஒப் அமெரிக்கா வானொலிச் சேவையை ரத்து செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இரணைவில்லில் இந்த வானொலிச் சேவை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வொய்ஸ் ஒப் அமெரிக்கா என்ற வானொலிச்சேவை குறித்த குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட உள்ளது. இந்த குத்தகைக் காலம் பூர்த்தியாகும் முன்னதாகவே குறித்த குத்தகை ஒப்பந்ததத்தை ரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

வொய்ஸ் ஒப் அமெரிக்கா என்ற அமெரிக்க நிறுவனத்தின் வானொலிச் சேவையை நடாத்திச் செல்வதற்காக இரணவில்லில் சுமார் 410 ஏக்கர் காணி குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த வானொலிச் சேவைக்கு உள்ளுர் மக்கள் மற்றும் இந்தியாவும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *