உலகம் பிரதான செய்திகள்

அவுஸ்திரேலியாவில் இசை வீடியோ படப்பிடிப்பில் தவறுதலாக இடம்பெற்ற சூட்டு சம்பவத்தில் நடிகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின்  பிரிஸ்பேன் நகரத்தில் நடிகர் ஒருவர் இசை வீடியோ படப்பிடிப்பின் போது தவறுதலாக இடம்பெற்ற சூட்டு சம்பவத்தில்  உயிரிழந்துள்ளார்.

28 வயதான Johann Ofner என்ற குறித்த  நடிகர் அவுஸ்ரேலியாவின் பிரிஸ்பேர்ண் நகரத்தில் ஈகிள் வீதியில் உள்ள      Brooklyn Standard bar   என்ற மதுபானசாலையில் இடம்பெற்ற படப்பிடிப்பின் போது மார்பு பகுதியில்  ஏற்பட்ட காயம் காரணமாக  உயிரிழந்தார்     குயின்ஸ்லாந்து  காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

உள்ளுர் நேரப்படி பிற்பகல் 2மணிக்கு இடம்பெற்ற படப்பிடிப்பின் போது பல துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன என  நகர காவல்துறையின் தெரிவித்துள்ளனர்.

அவரது மரணத்தை உறுதி செய்தி  இசைக்குழு நிர்வாகம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் வேறெதுவும் சொல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.  Johann Ofner  பல உள்ளுர் விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *