இலங்கை பிரதான செய்திகள்

மஹிந்தவை சந்தித்த முதலமைச்சர்களுடன் சந்திரிக்கா பேச்சுவார்த்தை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அண்மையில் சந்தித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதலமைச்சர்களுடன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தொலைபேசி ஊடாக சந்திரிக்கா இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சுதந்திரக் கட்சியின் முதலமைச்சர்களுக்கும் மஹிந்தவிற்கும் இடையிலான சந்திப்பு காரசாரமான விவாதமாக மாற்றமடைந்திருந்தது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியிருந்த  நிலையில் சந்திரிக்கா நேற்றைய தினம் குறித்த முதலமைச்சர்களுடன் தொலைபேசி ஊடாக பேசியுள்ளார். எவ்வாறான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *