இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

மலையக பாடசாலைகளுக்கு 112 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன


மலையகத்தின் 25 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்தில் 23  கணித விஞ்ஞான பாடசாலைகளுக்கும் ஒரு விளையாட்டு பாடசாலைக்கும்  ஒரு நுண்கலை பாடசாலைக்கும் தேவையான 112 மில்லியன் ரூபா பெறுமதியான  தளபாடங்கள்¸ விளையாட்டு பொருட்கள்¸ நுன்கலை சாதனங்கள்¸ விஞ்ஞான உபகரணங்கள். ஆகியன கையளிக்கும் தேசிய நிகழ்வு கல்வி   இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் நுவரெலியா பிரதேச செயலகத்தின் ‘ஆச்சரிய’ மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த மலையக பாடசாலை அபிவிருத்தி செயற்திட்டத்திற்கு வரவு செலவு திட்;டத்தில் 250 மில்லியன் ஒதுக்கபட்டுள்ளது. இதில் பாடசாலைகளின் கட்டிட திருத்தம்¸ புதிய கட்டிடங்கள் அமைத்தலுக்கு 138 மில்லியன் ஒதுக்கப்பட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந் நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சர்¸ மலேசிய பிரதமரின்  நாட்டின்   கல்வி அபிவிருத்தி பணிப்பாளர் இராஜேந்திரன் நாகப்பன். அவருடன் வந்த 09 பேர் அடங்கிய குழு¸ கல்வி அமைச்சின் பெருந்தோட்ட பாடசாலை அபிவிருத்திக்கான பனிப்பளார் திருமதி மகேஸ்வரி சபாரஞ்சன் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.அரவிந்தகுமார்¸ வேலு குமார்¸ எம்.திலகராஜ் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள். கல்வி அமைச்சின் அதிகாரிகள்¸ நுவரெலியா கல்வி வலையத்தின் கல்வி அதிகாரிகள் உட்பட 25 பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்டார்கள்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *