இந்தியா பிரதான செய்திகள்

ஜல்லிக்கட்டுப் போராட்டம் – 72 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்:-

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இடம்பெற்ற போராட்டங்களின் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 72 பேர் எழும்பூர் நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்தப்பட்டு நேற்று இரவு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்தப்பட்ட பலருக்கு காயங்கள் இருந்ததாகவும் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளர்h.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்திய மாணவர்களை நேற்று முன்தினம் போலீசார் வெளியேற்றிய வேளை அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் மறியல் போராட்டம் இடம்பெற்றதும் அவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்களை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

 

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *