இலங்கை பிரதான செய்திகள்

அனைத்து இனத்தவரும் ஒரே பாடசாலையில் கல்வி கற்க பின்னணி உருவாக்கப்பட வேண்டும் – மனோ கணேசன்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அனைத்து இனத்தவரும் ஒரே பாடசாலையில் கல்வி கற்கக் கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டுமென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஒரே பாடசாலையில் அனைத்து இனங்களையும் சேர்ந்த மாணவ மாணவியர் கல்வி கற்கக்கூடிய வகையிலான ஓர் உத்தேச திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இதன்மூலம் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் ஒரே பாடசாலையில் கல்வி கற்கக்கூடிய பின்னணி உருவாக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இனங்களின் அடிப்படையில் பாடசாலைகள் உருவாக்கப்படுவதனால் பாடசாலை மாணவர்கள் மத்தியில் தேவையற்ற பிளவு ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார். காலி உடுகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *