இலங்கை பிரதான செய்திகள்

நியமனங்களில் தலையீடு செய்யப் போவதில்லை – ஜனாதிபதி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

எந்தவொரு  அமைச்சின் நியமனங்களிலும் தாம் தலையீடு செய்யப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் சில நியமனங்கள் தொடர்பில் தாம் தலையீடு செய்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர் அமைச்சு நியமனங்கள் தொடர்பில் குறைந்தபட்சம் தாம் தொலைபேசி அழைப்புக்களையேனும் எடுப்பதில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் தாம் சுகாதார அமைச்சராக கடயைமாற்றிய காலத்தில் கூட நியமனங்கள் தொடர்பில் தலையீடு செய்ததில்லை எனவும் திணைகளத் தலைவர்களே நியமனங்கள் தொடர்பிலான தீர்மானங்களை எடுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *