இலங்கை பிரதான செய்திகள்

1479 பேருக்கு கல்வி முதுமாணி¸ கல்விமாணி பட்டம் அளிப்பு

 

தேசிய கல்வி நிறுவகத்தில்  கல்வி முதுமாணி மற்றும் கல்விமாணி கல்வி  நெறியை நிறைவு செய்த 770 கல்வி முதுமாணி மற்றும் கல்விமாணியினருக்கு பட்டமளிக்கும் விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் இன்று (31) நடைபெற்றது.

தேசிய கல்வி நிறுவகத்தின்  பணிப்பாளர் நாயகம் கலாநிதி திருமதி ஜே.குணசேகர தலைமையில் நடைபெற்ற முதலாம் அமர்வு நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் கலந்துக் கொண்டார்.

மாலை நடைபெறவுள்ள இரண்டாம் அமர்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துக் கொள்ள உள்ளார். இந் நிகழ்வில் நாடளாவிய ரீதியில் காணப்படும் தேசிய கல்வி நிறுவகத்தின் கிளை நிறுவகத்திலும் கொழும்பு தலைமை நிறுவகத்திலும் பயின்று பட்டம் பெற்ற 1479 பேருக்கு இந்த கல்வி முதுமாணி மற்றும் கல்விமாணியினருக்கு பட்டம் வழங்கபட்டது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *