பிரதான செய்திகள் விளையாட்டு

பார்வையற்றோருக்கான இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் முதல்நாள் போட்டியில் இந்திய – பாகிஸ்தான் அணிகள் வெற்றி :


பார்வையற்றோருக்கான இருபதுக்கு  20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று டெல்லியில் ஆரம்பமாகியுள்ளது.  இதில் நடப்பு சம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில்  பங்களாதேசை எதிர்த்து விளையாடியது.

நாணயச்சுழற்சியில்  வென்று முதலில்  துடுப்பாடிய  இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 279  ஓட்டங்களைப் பெற்றது. தொடக்க வீரர்களான பிரகாஷ் 96 ஓட்டங்களையும்  கீட்டன் படேல் 98 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்
அடுத்து  280  என்ற வெற்றி இலக்குடன்  களமிறங்கிய பங்களாதேஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 150 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இதனால் 129 ஓட்டவித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வென்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய  நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 112 ஓட்டங்களை பெற்றது.  பதிலுக்கு துடுக்பெடுத்தாடிய  பாகிஸ்தான் அணி 7.2 ஓவர்களிலேயே 117 ஓட்டங்களைப் பெற்று  வெற்றி பெற்றது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *