இலங்கை பிரதான செய்திகள்

கோணாவில் மக்களின் நீர்ப்பிரச்சினையை தீர்க்குமாறு கோரிக்கை:-

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

கிளிநொச்சி கோணாவில் கிராமத்தில் நிலவும் குடிநீர் நெருக்கடி காரணமாக மக்கள் அவலங்களை எதிர்கொண்டுள்ளனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 1,100 க்கு மேற்பட்ட குடும்பங்களைக் கொண்ட இக்கிராமத்தில் நீண்டகாலமாக குடிநீர் நெருக்கடி நிலவி வருகின்றது. கோடை காலங்களில் கிணறுகளில் நீர் வற்றுகின்ற போது மூன்று கிலோமீற்றர் தூரத்தில் உள்ள புதுமுறிப்புக் குளத்திற்கே குளிப்பதற்கு மக்கள் செல்கின்றனர்.

இக்கிராமத்தினை மையப்படுத்தி குடிநீர்த் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துமாறு இக்கிராம மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். காந்திக் கிராமம், கோணாவில் மத்தி, இராஜன் குடியிருப்பு ஆகிய பகுதி மக்களே கூடுதலாக நீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர். இக்கிராமத்தில் கூடுதலாக பொதுக் கிணறுகளை அமைப்பதன் மூலமும் குடிநீர் நெருக்கடிக்கான தீர்வினை வழங்க முடியும். இதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள், அரசியல்வாதிகள் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *