இலங்கை பிரதான செய்திகள்

2020ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கமொன்று அமைக்கப்படும்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


2020 ஆண்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கமொன்று அமைக்கப்படும் என மேல் மாகாண அமைச்சர் காமினி திலகசிறி தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஆசிரியர்கள், இளைஞர்கள், தொழில்வான்மையாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொள்ள எதிர்பார்க்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் நுகேகொடையில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், ஜனாதிபதி மைத்திரிபாலவும் இணைந்து மேடையில் ஏறி கூட்டம் நடத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *