இலங்கை பிரதான செய்திகள்

வட்டுக்கோட்டை கொலை தொடர்பான விசாரணை ஆரம்பம்.

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் வைத்து ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் திகதி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற துடுப்பாட்ட போட்டியின் போது ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவன் ஒருவர் கொல்லப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது.முதல் நாள் சாட்சி பதிவுகள் இன்றைய தினம் பதிவுசெய்யப்பட்டன.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts