இலங்கை பிரதான செய்திகள்

எதியோப்பியாவில் தூதரகமொன்று இன்று ஆரம்பிக்கப்பட உள்ளது

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

எதியோப்பியாவில் இலங்கைத் தூதரகமொன்று இன்று ஆரம்பிக்கப்பட உள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர எதியோப்பியாவிற்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.

எதியோப்பிய வெளிவிவகார அமைச்சர் Workneh Gebeyehu இன் அழைப்பினை ஏற்றுக் கொண்டு இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஆபிரிக்காவின் எதிர்காலம் எதியோப்பியாவிடம் உள்ளதாகவும் இதனால் ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் எதியோப்பியாவிற்கான இலங்கைத் தூதரகம் தலைநகரில் இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட உள்ளளது.  எதியோப்பிய ஜனாதிபதி, சபாநாயகர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடனும் மங்கள சமரவீர சந்திப்புக்களை நடத்தியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *