இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் ஒரு மாடி வகுப்பறை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் ஒரு மாடி வகுப்பறை கட்டிடம் இன்று 02-02-2017 திறந்து வைக்கப்பட்டது. மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் அமைக்கப்பட்ட வகுப்பறை கட்டிடத் தொகுதியே திறந்து வைக்கப்பட்டது.

நெற்களஞ்சியசாலை கட்டிடங்கள் இரண்டில் இயங்கி வந்த  வடக்கச்சி ஆரம்ப பாடசாலையானது தற்போது அனைத்து சமூக நலன்விரும்பிகளின் உதவியுடன் புதுப்பொழிவு பெற்று வருகிறது என பாடசாலை அதிபா் மகிழ்ச்சி தெரிவித்துள்ளாா்.

பாடசாலை அதிபா் அ.பங்கையற்செல்வன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்   வட மாகாண முதலமைச்சா் க.வி. விக்கினேஸ்வரன் முதன்மை விருந்தினரா கலந்துகொண்டு வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்துள்ளாா்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரன்,வடக்கு மாகாண சபை உறுப்பினா்களான தவநாதன், அரியரத்தினம்,பசுபதிபிள்ளை, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளா் க.முருகவேல் மற்றும் ஏனைய பாடசாலைகளின் அதிபா்கள், ஆசிரியா்கள் பெற்றோா்கள் என பலா் கலந்துகொண்டனா்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *