இலங்கை பிரதான செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதியின் தீர்மானத்தினால் இலங்கையர்களுக்கு பாதிப்பு எதுவும் கிடையாது

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் தீர்மானத்தினால் இலங்கையர்களுக்கு பாதிப்பு கிடையாது என வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மஹேசினி கொலன்ணே தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஜோன் எப். கென்னடி விமான நிலையத்தில் இலங்கையர்கள் உள்ளிட்ட 71 வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டுக்குள் பிரவேசிக்க முடியாதிருப்பதாக வெளியான தகவல்கள் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த எவரும் அமெரிக்காவி;ற்குள் பிரவேசிக்க முடியாமல் அந்நாட்டின் எந்தவொரு விமான நிலையத்திலும் தத்தளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்கள் குறித்து அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதரகம் உரிய கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தகவல்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் 001 917 597 7009  என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *