இலங்கை பிரதான செய்திகள்

தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது – ருவான் விஜேவர்தன

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் செய்து வரும் பிரச்சாரங்களில் உண்மையில்லை என குறிப்பிட்டுள்ள அவர் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் காணப்பட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  கொலை சதி முயற்சி பற்றிய விபரங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருக்காது என தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமெனவும்  வலியுறுத்தியுள்ள பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் உத்தேச அரசியல் சாசனம் பௌத்த மதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூட்டு எதிர்க்கட்சியினர் போலிப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *