இலங்கை பிரதான செய்திகள்

யாழில் முப்படைகள் மற்றும் காவல்துறையினருக்கு 1505 ஏக்கர் காணி சுவீகரிக்க திட்டம். – சிவாஜிலிங்கம்:-

யாழில்.முப்படைகள் மற்றும் காவல்துறையினருக்கு என ஆயிரத்து 505 ஏக்கர் காணி சுவீகரிக்கப்படவுள்ளதாக வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்து உள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , எதிர்வரும் 09ம் திகதி யாழ்.மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் காணி ஆணைக்குழுவின் ஆணையாளர் முப்படையினர் மற்றும் காவல்துறையின் தேவைகளுக்கு என 1505 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்கான அனுமதியினை வழங்க உள்ளார். ஒரு குளி நிலத்தினை கூட யாழில் முப்படைகள் மற்றும் காவல்துறையினருக்கு என காணிகள் வழங்க முடியாது.

ஏற்கனவே யாழில் 6 ஆயிரத்து 500 ஏக்கர் காணியினை கையகப்படுத்தி வைத்து இருந்தனர் பின்னர் அதில் ஆயிரத்து 500 ஏக்கர் காணியினை இந்த அரசாங்கம் விடுவித்தது. தற்போது 1505 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதர்கான நடவடிக்கைகளை எடுக்க உள்ளனர்.

பலாலி விமான நிலையத்திற்கு என 600 ஏக்கர் காணியினை விமான படையினர் கோரியுள்ளனர். பலாலி விமான நிலையம் இராணுவ விமான நிலையமாக இருக்காது சிவில் விமான நிலையமாக மாற்றம் செய்யப்பட வேண்டும். என தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *