உலகம் பிரதான செய்திகள்

அமெரிக்காவுக்குள் வெளிநாட்டு முஸ்லிம்கள் நுழைய விதித்துள்ள தடையை நீக்குக – டொனால்ட் டிரம்பிடம் ஐ.நா. பொதுச்செயலாளர் கோரிக்கை:-

அமெரிக்காவுக்குள் வெளிநாட்டு முஸ்லிம்கள் நுழைய விதித்துள்ள தடையை நீக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டர்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த ஐ.நா. பொதுச் செயலாளர் 7 முஸ்லிம் நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி விதித்துள்ள விசா தடையை தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்றும் சிறந்த வழியாக கருத முடியாது எனவும் அது அது கோபத்தையும், கவலையையும் அதிகரிக்கவே செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த தடை விரைவில் நீக்கப்பட வேண்டும் எனவும் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் நுழைவதை தடுக்க முடியாது எனவும் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்த விரும்பும் தீவிரவாதிகள் கடவுச்சீட்டு மூலம் நபர்களை அனுப்ப மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *