உலகம் பிரதான செய்திகள்

சீனாவில் அழகுக்கலை நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்

சீனாவில் ஷிஜியாங் மாகாணத்தின்  தியான்டை பகுதியில் உள்ள  ஒரு அழகுக்கலை நிலையத்தில் நேற்று மாலை  ஏற்பட்ட தீவிபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

தீப்பிடித்ததும் அங்கு பணியில் இருந்தவர்களும், வாடிக்கையாளர்களும் கண்ணாடி ஜன்னல்கள் வழியாக வெளியே குதித்து தப்பி ஓடிய போதும்  குறித்த  தீ விபத்தில் 18 பேர்   உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில்   அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு தியான்ஜின் நகரில் சாயபட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 114 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *