இலங்கை பிரதான செய்திகள்

நடேஸ்வரக் கல்லூரியின் அதிபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரியின் அதிபர் அளவெட்டியில் உள்ள தனது தாயிரின் வீட்டில் நேற்றைய தினம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மானிப்பாயை சேர்ந்த பொ.அமிர்தலிங்கம் (வயது 58) , என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

மானிப்பாயில் வசிக்கும் குறித்த அதிபர் நேற்றைய தினம் விடுமுறை தினமாகையால் அளவெட்டியில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு தற்போது எவருமே வசிப்பதில்லை.

காலையில் வீட்டில் இருந்து சென்ற அதிபரைக் காணாது வீட்டார் பல இடத்திலும் தேடியுள்ளனர். அதன் பின்பு அளவெட்டி வீட்டினையும் பார்வையிட்டுள்ளனர். இவ்வாறு தேடுதல் மேற்கொண்ட சமயம் தொலைபேசிக்கு அழைப்பு மேற்கொண்டவேளையில் அலைபேசி இயங்கும் சத்தம் வீட்டிற்குள் இருந்து வருவது கவனிக்கப்பட்டது. இதனையடுத்தே வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உறவினர்கள் உள்ளே சென்று பார்வையிட்டுள்ளனர்.

அவ்வேளை அதிபர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். மின்சார வயரில் அவரது சடலம் தொங்கிய நிலையில் காணப்பட்டது.

இது தொடர்பில் உடனடியாக தெல்லிப்பழை பொலிசாரிற்கு அறிவிக்கப்பட்டதனையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

1 Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

  • மிகப் பெரும் பாடசாலையின் அதிபர் ஏன் தற்கொலை பண்ணினார் என்பது சோகமே, எதிரிகள் யாரும் இவரை கொலை பண்ணி விட்டு தூக்கில் ஏற்றினார்களா, இல்லை இவராக தூக்கில் தொங்கினாரா என்பது ஆண்டவனுக்கே புரியும், எதுஎப்படியோ, தமிழர்கள் தற்கொலை பண்ணுவதை நிறுத்துங்கள், தற்கொலை பண்ணியவுடன் எல்லாம் முடிந்து விடும் என்று நினைக்கவேண்டாம், அதன் பின்பே வாழ்க்கை இருக்கின்றது என்பதனை புரிந்து கொள்ளுங்கள், பெரும் கல்வி கற்ற இவரே இப்படி என்றால், சாதாரண மக்களை சொல்லவும் வேண்டுமா, தற்கொலை என்பது முடிவல்ல, அது தொடர்கதை, என்பதனை உலகத் தமிழர்கள் மறந்து விடவேண்டாம்,===============