இந்தியா பிரதான செய்திகள்

டெல்லி உட்பட வட மாநிலங்கள் பலவற்றில் நிலநடுக்கம் :

இந்தியாவின் தலைநகர் டெல்லி உட்பட வட மாநிலங்கள் பலவற்றில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 6 ரிக்டராக பதிவானதாகவும் இதன் தாக்கம்  டெல்லியின் பல பகுதிகளிலும் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.   இந்த நிலநடுக்கமானது  பூமிக்குக் கீழே 14.2 கிலோமீட்டர் ஆழத்திற்குள் 30 விநாடிகள்  வரை ஏற்பட்டதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன

இன்று இரவு  இரவு சரியாக 10.30 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி முழுவதும் உணரப்பட்டதுடன்  உத்தர்கண்ட் மாநிலத்தின் பல பகுதிகளிலும்  உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து  அச்சமடைந்த மக்கள்  வீடுகளை விட்டு வெளியேறியதாகவும்  இருப்பினும் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை எனவும் இந்திய செய்திகள் தெரிவிவிக்கின்றன.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *