இலங்கை பிரதான செய்திகள்

விமல் வீரவன்சவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு:-


ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்சவை எதிர்வரும் 20ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஸ அரசாங்க ஆட்சிக் காலத்தில் அமைச்சராக பதவி வகித்த போது விமல் வீரவன்ச சுமார் 40 அரச வாகனங்களை துஸ்பிரயோகம் செய்துள்ள குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளமை தொடர்பான வழக்கு இன்றையதினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதவான் இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பிணை வழங்குமாறு கோரி கோட்டே நீதிமன்றில் விமல் வீரவன்ச தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளிப்பதற்காக சட்டமா அதிபர் மற்றும் நிதிக்குற்ற தடுப்புப் பிரிவின் பிரதானி ஆகியோரை எதிர்வரும் 13ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *