இலங்கை பிரதான செய்திகள்

இலங்கைக்கும் மாலைதீவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை

குளோபல்தமிழ்ச் செய்தியாளர்

இலங்கைக்கும் மாலைதீவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் 9ம் திகதி மாலைதீவு வெளிவிவகார அமைச்சில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட பிரதிநிதிகள் மாலைதீவிற்கு செல்ல  உள்ளனர். மாலைதீவு வெளிவிவகார  அமைச்சர் டொக்டர் மொஹமட் அசிம் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.

மேலும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீனையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பொருளாதார உறவுகள், சுற்றுலாத்துறை, மீன்பிடித்துறை, கல்வி, சுகாதாரம், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி போன்ற விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts