உலகம் பிரதான செய்திகள்

இணைப்பு 2 செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களை கொலை செய்ததாக ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது குற்றச்சாட்டு

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பணியாளர்களை கொலை செய்ததாக ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடமையாற்றி வரும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆறு பணியாளர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆறு பணியாளர்களையும் ஐ.எஸ் தீவிரவாதிகள் படுகொலை செய்திருக்க வேண்டுமென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் வடபகுதியில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்பொழிவு காரணமாக அங்கு சிக்குண்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் சென்றவர்களே தாக்கப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பணியாளர்களை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *