இந்தியா பிரதான செய்திகள்

அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசவுள்ளார்கள்:-

அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசவுள்ளார்கள். இதற்காக, நேற்று இரவே அவர்கள் டெல்லி சென்றுள்ளனர்.

முதலமைச்சராக சசிகலா பதவி ஏற்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஜனாதிபதியிடம் முறையிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 48 பேர் இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேச உள்ளதாகவும் அதற்கான அனுமதியும் அவர்களுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலையிட்டு தமிழக ஆளுனரை உடனடியாக பதவி ஏற்க அழைப்பு விடுக்குமாறு வலியுறுத்த வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *