இலங்கை பிரதான செய்திகள்

இந்த ஆண்டில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாது – உதய கம்மன்பில

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இந்த ஆண்டில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாது என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த ஆண்டிலும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்தும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகளுக்கும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த விடயம் தமக்கு புலனானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகளுக்கும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் இடையில் ராஜகிரியவில்  அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழுவில் இன்றைய தினம் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *